/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பயோமெட்ரிக்' கருவியில் குளறுபடி பணிக்கு வந்தவர்களுக்கு 'ஆப்சென்ட்' போக்குவரத்து ஊழியர்கள் ஆத்திரம்

ADDED : ஜூன் 04, 2025 12:24 AM
சென்னை சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட, மொத்தம் 19,415 பேர் பணியாற்றுகின்றனர்.
பல்லவன் இல்லத்தில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் 32 பணிமனைகளிலும், ஊழியர்களின் வருகையை பதிவு செய்யும் வகையில், கடந்த ஏப்., மாதம், 'பயோமெட்ரிக்' கருவி அறிமுகம் செய்யப்பட்டது.
அனைவரும் கட்டாயமாக பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய வேண்டுமென நிர்வாகம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, மாநகர போக்குவரத்து ஊழியர்களின் கடந்த மாதம் வருகை பதிவில், பணிக்கு வந்த 750க்கும் மேற்பட்டோருக்கு, 'ஆப்சென்ட்' ஆக வந்துள்ளது. இதனால், ஊழியர்களின் விடுப்பில் கழிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, போக்குவரத்து ஊழியர்கள் கூறியதாவது:
பயோமெட்ரிக் வருகை பதிவில், ஒரு இன், ஒரு அவுட் பதிவு இருந்தால் மட்டுமே, ஒரு நாள் பணியாக பதிவாகி இருக்கிறது.
சில நேரங்களில், தொழில்நுட்ப கோளாறும் ஏற்படுகிறது. மேலும், மாநகர போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட சில பிரிவு ஊழியர்களுக்கு, இந்த வருகை பதிவுமுறை பொருந்தாத சூழலில் இருக்கும்.
இந்த குளறுபடியால், பணிக்கு வந்த 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஐந்த முதல், 20 நாட்கள் வரையில், சில ஊழியர்களுக்கு ஆப்சென்ட் காட்டி உள்ளது.
இதற்காக, சம்பளம் பிடித்தம் செய்யாவிட்டாலும், ஊழியர்களின் விடுப்பு கழிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.