/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாழ்வாக தொங்கிய மின் கம்பியால் விபத்து
/
தாழ்வாக தொங்கிய மின் கம்பியால் விபத்து
ADDED : ஆக 23, 2025 12:35 AM
ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், 60 அடி சாலையில், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகப்படியாக உள்ளன. அந்த சாலையில், நேற்று பிற்பகலில் குடிநீர் லாரி ஒன்று சென்றது.
அந்நேரம் அங்கு தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின் கம்பி, குடிநீர் லாரியின் மேல்பக்க மூடியில் சிக்கியது. இதில், சாலையோரத்தில் இருந்த, மூன்று மின் கம்பங்கள் சரிந்து, சாலையின் குறுக்கே விழுந்தன. அந்நேரம், அவ்வழியாக யாரும் செல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள, 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, மூன்று மணி நேரத்திற்கும் மேல், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள், மாற்று ஏற்பாடு செய்து, மாலை மின் இணைப்பு வழங்கினர். சேதமடைந்த கம்பங்கள், இன்று சீரமைக்கப்படும் என, மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.