/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்
/
போதை ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்
ADDED : ஆக 23, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலம்பாக்கம், விலம்பாக்கம் ஊராட்சியில் 12ம் தேதி நடக்க இருந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை ஆய்வு செய்ய, பரங்கிமலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீனா, மேடவாக்கம் ஊராட்சி மேற்பார்வையாளர் ராஜேஷ் ஆகியோர், 11ம் தேதி இரவு சென்றனர்.
அப்போது, கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் ஏழுமலை, ராஜேஷை திட்டி, அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.
பரங்கிமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மது போதையில் ஊராட்சி செயலர் ஏழுமலை இச்செயலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் ஏழுமலையை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.