/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கான்கிரீட் சாலையை அகற்றாமல் தார் சாலை பெயர்ந்த ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
/
கான்கிரீட் சாலையை அகற்றாமல் தார் சாலை பெயர்ந்த ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
கான்கிரீட் சாலையை அகற்றாமல் தார் சாலை பெயர்ந்த ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
கான்கிரீட் சாலையை அகற்றாமல் தார் சாலை பெயர்ந்த ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
ADDED : பிப் 24, 2026 05:55 AM

கோடம்பாக்கம்: வள்ளுவர்கோட்டத்தில், ஏற்கனவே போடப்பட்ட கான்கிரீட் சாலையை அகற்றாமல் அதன் மீது தார் சாலை அமைப்பதால், வீடுகள் பள்ளமாக மாறியதுடன், ஜல்லி கற்கள் பெயர்ந்து பகுதிமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தேனாம்பேட்டை மண்டலம், வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள வைகுண்டபுரம் இரண்டாவது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
அந்த கான்கிரீட் சாலையை அகற்றாமலும், 'மில்லிங்' எனும் சாலையை பெயர்த்தெடுக்காமல், அதன் மீது அப்படியே தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது. அதுவும், ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் அதன் மீது தார் ஊற்றாமல் சாலை அமைக்கும் பணி நடந்து வந்ததால், அப்பகுதிமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து கேள்வி எழுப்பவும், பணியாளர்கள், சாலை பணியை பாதியிலேயே நிறுத்தி சென்றுவிட்டனர்.
ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதால், அதன் மீது செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து, விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து, நுங்கை குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
மூன்று மாதங்களுக்கு முன், இத்தெருவில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தோண்டி எடுக்கப்பட்ட மின் வடங்கள், மீண்டும் முறையாக புதைக்கப்படவில்லை.மழைநீர் வடிகால்வாய் மேல் வெளிப்புறமாக செல்லும் மின் கேபிள்களால், சில வீடுகளின் கேட்டை திறக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், கான்கிரீட் சாலையை அகற்றாமல், அதன் மீது தார் சாலை அமைப்பதால், சாலை மட்டம் உயர்ந்து, வீடுகள் பள்ளத்திற்கு சென்றுவிட்டன.
இதனால் மழைக்காலத்தில், வீடுகளுக்குள் வெள்ளம் புகும் நிலை உருவாகியுள்ளது.எனவே, பழைய கான்கிரீட் சாலையை முறையாக அகற்றி, தரை நிலைக்கு ஏற்ப புதிதாக தார் சாலை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

