/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஸ் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் பட்டாபிராமில் விபத்து அபாயம்
/
காஸ் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் பட்டாபிராமில் விபத்து அபாயம்
காஸ் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் பட்டாபிராமில் விபத்து அபாயம்
காஸ் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் பட்டாபிராமில் விபத்து அபாயம்
ADDED : மார் 20, 2025 12:13 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் 'டொரெண்டோ' காஸ் குழாய் பதிக்கும் பணி, பல மாதங்களாக நடந்து வருகிறது.
பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு, பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஆவடி அடுத்த பட்டாபிராம், சார்லஸ் நகர், ராதாகிருஷ்ணன் தெரு அருகே சி.டி.எச் அணுகு சாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், காஸ் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது.
அதில் குழாய் பதிக்கப்பட்ட நிலையில், அந்த பள்ளம் மூடப்படாமல், ஆபத்தான வகையில் இரும்பு குழாய் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது.
இதனால், அணுகு சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, சார்லஸ் நகர், ராதாகிருஷ்ணன் தெருவிற்கு திரும்பும் வளைவில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால், பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் தினமும் அவதிப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பள்ளத்தை மூட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
***