/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரிகள் பார்க்கிங் மணலியில் விபத்து அதிகரிப்பு
/
கன்டெய்னர் லாரிகள் பார்க்கிங் மணலியில் விபத்து அதிகரிப்பு
கன்டெய்னர் லாரிகள் பார்க்கிங் மணலியில் விபத்து அதிகரிப்பு
கன்டெய்னர் லாரிகள் பார்க்கிங் மணலியில் விபத்து அதிகரிப்பு
ADDED : நவ 27, 2024 12:21 AM
மணலிஅணுகுசாலைகளை ஆக்கிரமித்து, கன்டெய்னர் லாரிகள் பார்க்கிங் செய்யப்பட்டிருப்பதால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
மணலியின், மாதவரம் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை மற்றும் மணலி விரைவு சாலைகளை, தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை துறைமுகம் நோக்கி செல்லும் கன்டெய்னர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இந்த சாலையில் அதிகம் பயணிக்கின்றன.
இந்நிலையில், மணலி விரைவு சாலை, சாத்தாங்காடு சந்திப்பில் உள்ள அணுகு சாலைகளில், கன்டெய்னர் லாரிகள் நாட்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சில வாரங்களுக்கு முன், நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரியில் மோதி தான், ஸ்கூட்டரில் சென்ற எண்ணுாரைச் சேர்ந்த தந்தை - மகன் பலியாகினர்.
அதே போல், பொன்னேரி நெடுஞ்சாலையில், ஆண்டார்குப்பம் சந்திப்பு, வைக்காடு சந்திப்பு, மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில், அணுகு சாலைகளில் கன்டெய்னர் லாரிகள், அனுமதியின்றி மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த லாரிகளில் இரவு நேரங்களில், சமூக விரோத செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் நிறுத்தியிருக்கும் லாரிகள் தெரியாமல், பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இலகுரக வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, போக்குவரத்து போலீசார் கவனித்து, அனுமதியின்றி நிறுத்தியிருக்கும் லாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மீறுவோரின் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும். இல்லாவிடில், உயிர்பலி தொடரும் அபாயம் உள்ளது என, பலரும் எச்சரிக்கின்றனர்.