ADDED : செப் 13, 2025 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், மது போதை தகராறில், நண்பரை கொன்ற மூன்று கூட்டாளிகளை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த, காக்களூர் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை, திருவள்ளூர் போலீசார் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர், திருவூர் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த செல்வகுமார் மகன் சங்கர், 21, என்பது தெரிந்தது.
இவர், நண்பர்களான காக்களூரைச் சேர்ந்த ஜெய்சிவா, 22, சுமன், 20, புல்லரம்பாக்கம் சைலேஷ், 21, ஆகிய மூவருடன், 'குணா விரைவு உணவகம்' பின்புறம், இம்மாதம் 9ம் தேதி மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட தகராறில், மூவரும் சேர்ந்து சங்கரை கல்லால் தாக்கி கொன்றதும் தெரிந்தது. ஜெய்சிவா, சுமன், சைலேஷ் ஆகிய மூவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.