/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரவாயல் சாலையில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை
/
மதுரவாயல் சாலையில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை
மதுரவாயல் சாலையில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை
மதுரவாயல் சாலையில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை
ADDED : ஜன 16, 2025 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் - -மதுரவாயல் பை-பாஸ் சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இதன் அணுகு சாலையில், குன்றத்துார் அருகே பரணிபுத்துார், கோவூர், சதானந்தபுரம் ஆகிய பகுதிகளில், தொழிற்சாலை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
மேலும், இந்த குப்பை தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
குப்பையை அகற்றி, அப்பகுதியில் குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்.-
- ஆர்.சுப்பிரமணியன், குன்றத்துார்.