/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லஞ்ச விவகாரம் சுகாதார அதிகாரி உட்பட இருவர் மீது நடவடிக்கை
/
லஞ்ச விவகாரம் சுகாதார அதிகாரி உட்பட இருவர் மீது நடவடிக்கை
லஞ்ச விவகாரம் சுகாதார அதிகாரி உட்பட இருவர் மீது நடவடிக்கை
லஞ்ச விவகாரம் சுகாதார அதிகாரி உட்பட இருவர் மீது நடவடிக்கை
ADDED : அக் 15, 2025 02:18 AM
சென்னை, கருத்தரிப்பு மைய பதிவை புதுப்பிக்க லஞ்சம் பெற்ற சுகாதார அதிகாரிகள் இருவர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இ.சி.ஆர்., நீலாங்கரையில் 'ஜனனம்' என்ற கருத்தரிப்பு மையம் உள்ளது. இந்த மையத்தின் பதிவை புதுப்பிக்க, சோழிங்கநல்லுார் மண்டல சுகாதார அதிகாரி கண்ணன், லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கிடைக்காததால், விண்ணப்பத்தை கி டப்பில் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை செயலர் கார்த்திகேயனிடம் புகார் சென்றது.
இதையடுத்து, கண்ணன் மற்றும் துப்புரவு அலுவலர் சுரேந்திரன் ஆகியோர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
ஏற்கனவே, கண்ணன் மாநகராட்சி விதியை மீறி, சுகாதார சான்று வழங்கிய விவகாரத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இப்போது லஞ்ச புகாரில் அவர் சிக்கியதால், இரு சம்பவங்களையும் விசாரிக்க, சீனிவாசன் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.