/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காத்திருப்போர் பட்டியலுக்கு இன்ஸ்., 2 எஸ்.ஐ., துாக்கியடிப்பு லஞ்சம் புகாரில் நடவடிக்கை

ADDED : ஜூலை 23, 2025 12:13 AM
சென்னை :போதை பொருள் வழக்கு விசாரணையின்போது, இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு எஸ்.ஐ.,க்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததை அடுத்து, அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபான விடுதி ஒன்றில், அடிதடியில் ஈடுபட்டதாக அ.தி.மு.க., பிரமுகர்களான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர், கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டபோது பிரசாத் 'கோகைன்' போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இவர் போதைப் பொருளை யாரிடம் வாங்கினார்; யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில், நடிகர்கள் உட்பட பலருக்கு பிரசாத் போதைப் பொருள் வினியோகம் செய்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுதாகர், ஆயிரம்விளக்கு சப் - இன்ஸ்பெக்டர் அருள்மணி, நுங்கம்பாக்கம் சப் - இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யாமல் இருக்க லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, போலீஸ் கமிஷனர் அருண், மூவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளார். மூவர் மீதும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.