/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் 74 ஏக்கர் பரப்புள்ள 4 குளங்களை சீரமைக்க நடவடிக்கை
/
ஓ.எம்.ஆரில் 74 ஏக்கர் பரப்புள்ள 4 குளங்களை சீரமைக்க நடவடிக்கை
ஓ.எம்.ஆரில் 74 ஏக்கர் பரப்புள்ள 4 குளங்களை சீரமைக்க நடவடிக்கை
ஓ.எம்.ஆரில் 74 ஏக்கர் பரப்புள்ள 4 குளங்களை சீரமைக்க நடவடிக்கை
ADDED : பிப் 13, 2024 12:25 AM

சோழிங்கநல்லுார்,
ஓ.எம்.ஆர்., பகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டில் உள்ள வண்ணான்கேணி குளம், பெருமாள் கோவில் குளம் ஆகியவை, தலா 3 ஏக்கர் பரப்பிலானவை.
இவற்றின் கரையை பலப்படுத்தி சீரமைக்க, 2.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேலும், 1 ஏக்கர் பரப்புள்ள, செங்கேணியம்மன் கோவில் குளத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் ஆய்வு முடித்துள்ளனர்.
அதேபோல், 200வது வார்டு, செம்மஞ்சேரியில், ஏழு சர்வே எண்களில், 67 ஏக்கர் பரப்பில் வால்வெட்டி குளம் உள்ளது. இந்த குளம், ஏழு பகுதிகளாக உள்ளதால், ஒரே குளமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதில், இரண்டு சர்வே எண்களில் உள்ள, 4 ஏக்கர் குளம், 1 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது.
மற்றொரு சர்வே எண்ணில் உள்ள 3 ஏக்கர் பரப்பு கொண்ட குளத்தை சீரமைக்க, 1.30 கோடி ரூபாயை, ஜெர்மனை சேர்ந்த கே.எப்.டபிள்யூ வங்கி ஒதுக்கியது.
மேலும், நான்கு சர்வே எண்களில், 60 ஏக்கர் பரப்பில் மீதமுள்ள குளத்தை சீரமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
நிதி வழங்கிய வங்கி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், குளங்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து, குளங்களை சீரமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.