ADDED : செப் 28, 2026 10:55 PM
அ நிறம் | அளவு
சென்னை, செப். 29–
நடிகை அம்பிகா மீது, நடிகை ராதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று, ராதாவிடம், 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
நடிகை ராதா, தன் அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். புகாரில், தான் கையெழுத்திட்ட காசோலைகள் மூலம் 46 கோடி ரூபாய் பணத்தை பெற முயற்சி நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று புகார்தாரரான, ராதாவிடம், 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராதா தன்னிடம் உள்ள ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.
