/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடிகை வீட்டு காவலாளியின் போன் திருட்டு
/
நடிகை வீட்டு காவலாளியின் போன் திருட்டு
ADDED : பிப் 15, 2025 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருகம்பாக்கம்:சாலிகிராமம் புஷ்பா காலனியில், 'ஆண்பாவம் உன்னால் முடியும் தம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சீதா வீடு உள்ளது. இங்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன், 73, என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக காவலாளியாக உள்ளார்.
கடந்த 12ம் தேதி இரவு, இவரது வீட்டிற்கு 'சொமேட்டோ'வில் ஆர்டர் செய்த உணவு வந்துள்ளது. அதை காவலாளி கோவிந்தராஜன், முதல் மாடியில் எடுத்து சென்று கொடுத்துள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, அறையில் இருந்த இவரது மொபைல் போன் திருட்டு போயிருந்தது. இது குறித்து புகாரையடுத்து விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

