/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காத்திருப்போர் பட்டியலில் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர்
/
காத்திருப்போர் பட்டியலில் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர்
காத்திருப்போர் பட்டியலில் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர்
காத்திருப்போர் பட்டியலில் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர்
ADDED : ஜன 18, 2025 12:37 AM
ஆதம்பாக்கம், சென்னை, ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர், குற்றச் செயல்கள் அதிகம் அரங்கேறும் இடமாகவும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அதிகம்புழங்கும் பகுதியாகவும் இருப்பதாக, காவல் துறை சார்பில் கூறப்படுகிறது.
இங்குள்ள ஆதம்பாக்கம், நியூகாலனி பகுதியில் இயங்கி வந்த காவல் நிலையம், சில காரணங்களுக்காக, அம்பேத்கர் நகரில் செயல்படுகிறது. கடந்த ஜூலை மாதம், மடிப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சரவணன், ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அவர், திடீரென ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மாற்றப்பட்டதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை.
போதை வஸ்துக்கள் விற்பனை செய்யும் கும்பலிடம் மாமூல் வாங்குவது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் கூட்டம் நடத்தியதாக, நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.