/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' உங்களுடன் ஸ்டாலின் ' முகாமில் பட்டாவுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் கேட்டு அடாவடி வளசரவாக்கம் கவுன்சிலர்குற்றச்சாட்டு
/
' உங்களுடன் ஸ்டாலின் ' முகாமில் பட்டாவுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் கேட்டு அடாவடி வளசரவாக்கம் கவுன்சிலர்குற்றச்சாட்டு
' உங்களுடன் ஸ்டாலின் ' முகாமில் பட்டாவுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் கேட்டு அடாவடி வளசரவாக்கம் கவுன்சிலர்குற்றச்சாட்டு
' உங்களுடன் ஸ்டாலின் ' முகாமில் பட்டாவுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் கேட்டு அடாவடி வளசரவாக்கம் கவுன்சிலர்குற்றச்சாட்டு
UPDATED : ஆக 18, 2025 03:21 AM
ADDED : ஆக 18, 2025 02:37 AM
வளசரவாக்கம்:'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் விண்ணப்பித்தோரிடம், பட்டா வழங்க வருவாய் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக, வளசரவாக்கம் மண்டல குழு கூட்டத்தில், கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் ராஜன் தலைமையில், மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் பொறுப்பு பானுகுமார், உதவி செயற்பொறியாளர்கள் ஞானவேல், குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
சங்கர்கணேஷ், தி.மு.க., 151வது வார்டு: போரூர், ஆர்.வி., நகர் தெரு, மாநகராட்சி சாலை பட்டியலில் முன்பு இடம் பெறாததால் சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது, அத்தெருக்கள் மாநகராட்சி சாலை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னும் மின் விளக்குகள் போடப்படவில்லை.
ஸ்டாலின், தி.மு.க., 144வது வார்டு: மதுரவாயல், அய்யாவு நகர் விரிவு பகுதி, கோவில் நிலமாக உள்ளது. ஹிந்து அற நிலையத் துறையிடம் அனுமதி பெற்று, அங்கு தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. அத்தெருக்களில் பாதாள சாக்கடை அமைத்தால் அப்பகுதி மக்கள் பயனடைவர். மதுரவாயல், கந்தசாமி நகரில், 10 தெருக்களில் குடிநீர் வசதியில்லை. அங்கு குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்யநாதன், அ.தி.மு.க., 145வது வார்டு: நெற்குன்றம் வள்ளியம்மை நகரில், 1969ம் ஆண்டு முதல் 30 அடி சாலை ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தை அளவீடு செய்ய, மாநகராட்சி கமிஷனர், சென்னை கலெக்டர் ஆகியோர் உத்தரவிட்டும், மதுரவாயல் தலைமை சர்வேயர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
பாரதி, தி.மு.க., 152 வது வார்டு: வார்டு வரையறையின்போது, 149 வது வார்டில் இருந்து, 152வது வார்டில் இணைக்கப்பட்ட தெருக்களில் உள்ள வீட்டு வரி, இன்னும் 152வது வார்டுக்கு மாற்றப்படாமல் உள்ளது. அதை விரைந்து மாற்ற வேண்டும்.
வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்கும் பணியை ஹிந்து அறநிலையத் துறை செய்து வருகிறது. அந்த குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் சேறும் சகதியும், அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விடப்படுகிறது.
இதனால், வடிகால்வாயை முழுமையாக துார்வார முடியாததால், மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தெருவுக்கு வழங்கப்படும் குழாயில் கழிவுநீர் கலந்து, மாசடைந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கிரிதரன், அ.ம.மு.க., 148வது வார்டு: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அனை த்து சேவைகளும் இலவசமாக கிடைக்கும். எந்த பணமும் அளிக்க வேண்டாம் என கருதி, மக்கள் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், பட்டா கேட்டு விண்ணப்பித்த இடங்களுக்கு செல்லும் மதுரவாயல் வருவாய் துறை அதிகாரிகள், பட்டா வழங்க லஞ்சம் கேட்கின்றனர்.
நெற்குன்றத்தில் பல இடங்களில் மின் கேபிள்கள் தாழ்வாக உள்ளன. பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளன.
செல்வகுமார், தி.மு.க., 154வது வார்டு: கடந்த 2024, ஜன., மாதம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. 20 மாதங்கள் கடந்தும் இன்னும் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் பம்பரமாக சூழன்று வேலை செய்கின்றனர். அதே போல் அனைத்து நாட்களிலும் வேலை செய்தால் நன்றாக இருக்கும். அதே சிஸ்டம், அதே அதிகாரி, அதே கையெழுத்து தான். ஆனால், பிற நாட்களில் அந்த வேகம் இருப்பதில்லை. அதேபோல், முகாமில் ஆதார் கார்டு மற்றும் இ - சேவை திட்டங்களுக்கு அதிக கவுன்டர் அமைக்க வேண்டும்.
மண்டல குழு தலைவர் ராஜன்: புது வீடுகட்டும் போது, தண்ணீர் வசதிக்காக சுவற்றில் குடிநீர் குழாய்கள் பதிக்கிறோம். குறை இல்லாமல் செய்வதால், அவற்றில் கசிவு வருவதில்லை. ஆனால், குடிநீர் வாரிய கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் தான், புதிய திட்டத்திற்கு பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் பல இடங்களில் கசிவு ஏற்படுகிறது.
அதை சீர் செய்ய, சாலை வெட்டு அனுமதி வழங்க மாநகராட்சி தயார், ஆனால், பணிகள் முடிந்து சாலையை முறையாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.