/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் கடை கட்டுவதால் குழந்தைகளுக்கு இடையூறு
/
ரேஷன் கடை கட்டுவதால் குழந்தைகளுக்கு இடையூறு
ADDED : ஆக 18, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கம்:அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில், வில்லிவாக்கம், சிட்கோ நகர் உள்ளது. இங்கு, மூன்றாவது பிரதான சாலையில், சென்னை மாநகராட்சி பராமரிப்பில், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
மைய வளாகத்தில், மாநகராட்சி சார்பில், இரண்டு ரேஷன் கடைகள் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன. வளாகத்திற்குள் குழந்தைகள் விளையாட்டு மையத்தை ஆக்கிரமித்து, ரேஷன் கடைகள் கட்டுவதாக குடியிருப்பு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பகுதிமக்கள் கூறுகையில், 'அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் விளையாடும் இடத்தை ஆக்கிரமித்து, ரேஷன் கடை கட்டி வருகின்றனர். இதனால், குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படும்' என்றனர்.