தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மெட்ரோ சுரங்கப்பணி வெற்றிகரமாக நிறைவு செய்த ‘அடையாறு’ இயந்திரம்

மெட்ரோ சுரங்கப்பணி வெற்றிகரமாக நிறைவு செய்த ‘அடையாறு’ இயந்திரம்

மெட்ரோ சுரங்கப்பணி வெற்றிகரமாக நிறைவு செய்த ‘அடையாறு’ இயந்திரம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில், ‘காவேரி’ இயந்திரம், சுரங்கப்பணிகளை முடித்து, கடந்த 29ம் தேதி சேத்துப்பட்டு – கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.

தொடர்ந்து, 30ம் தேதி, ‘மருதம்’ இயந்திரம், வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

இந்நிலையில், ‘அடையாறு’ என்ற இயந்திரம் 915 மீ., துார சுரங்கப் பணியை, 277 நாட்களில் முடித்து, ராயப்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ நிலையத்தை நேற்று வந்தடைந்தது.

தொடர்ந்து மூன்று நாட்களில், சுரங்கம் தோண்டும் மூன்று இயந்திரங்கள் தங்கள் பணிகளை நிறைவு செய்து, சாதனை படைத்துள்ளன.

இதில், ‘அடையாறு’ சுரங்கம் தோண்டும் இயந்திரம், ராயப்பேட்டை நெடுஞ்சாலையின் பீட்டர்ஸ் பாலம், இ.பி.எப்., அலுவலகம், ஆந்திரா பள்ளி மற்றும் பல்வேறு நெரிசலான கட்டடங்களுக்கு அடியில், 9 – 13 மீட்டர் ஆழத்தில், பாதுகாப்பாக சுரங்கப்பாதை அமைத்துள்ளது.

சவாலான சூழ்நிலைகள் இருந்த போதிலும், கட்டடங்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, இந்த சாதனை வெற்றிக்கரமாக எட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் உட்பட பலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us