தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை – பிராங்பர்ட் இடையே கூடுதல் விமானம்: லுப்த்ஷான்ஸா

சென்னை – பிராங்பர்ட் இடையே கூடுதல் விமானம்: லுப்த்ஷான்ஸா

சென்னை – பிராங்பர்ட் இடையே கூடுதல் விமானம்: லுப்த்ஷான்ஸா


UPDATED : நவ 19, 2026 06:12 PM

ADDED : நவ 19, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 06:12 PM ADDED : நவ 19, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை -– ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரங்களுக்கு இடையே, வாரந்தோறும் இரண்டு கூடுதல் விமான சேவைகளை இயக்க உள்ளதாக, லுப்த்ஷான்ஸா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து பிராங்பர்ட் நகருக்கு, தினசரி விமான சேவைகளை லுப்த்ஷான்ஸா நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், சர்வதேசப் பயணியரின் தொடர் வரவேற்பு மற்றும் அதிகரித்து வரும் பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு, விமான சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.

அதன்படி, அடுத்தாண்டு ஜன., 11ம் தேதி முதல் சென்னை –- பிராங்பர்ட் வழித்தடத்தில், வாரத்திற்கு இரண்டு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த கூடுதல் விமான சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பயணியர், முன்கூட்டியே தங்கள் பயணத் திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என, லுப்த்ஷான்ஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து ஜெர்மனி மட்டுமின்றி, பிராங்பர்ட் வழியாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்கு, இணைப்பு விமானங்கள் வாயிலாக செல்லும் வர்த்தக பயணியர், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணியருக்கு, இச்சேவை பெரிதும் பயனுள்ளதாக அமையும் என, விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us