/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக எம்.டி.சி., பஸ் இயக்கம்
/
சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக எம்.டி.சி., பஸ் இயக்கம்
சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக எம்.டி.சி., பஸ் இயக்கம்
சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக எம்.டி.சி., பஸ் இயக்கம்
ADDED : ஜன 18, 2025 12:44 AM
சென்னை,
பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை வருவோருக்கு வசதியாக, நாளையும், நாளை மறுநாளும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பொங்கல் பண்டிகை கொண்டாடிவிட்டு, தொலை துார பேருந்துகளின் வாயிலாக சென்னை திரும்புவோர், பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அந்த வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, நாளை மதியம் முதல் வழக்கமான 482 பேருந்துகளுடன் கூடுதலாக 150 சிறப்பு பேருந்துகள், சென்னை, புறநகருக்கு இயக்கப்படும்.
அதேபோல், நாளை மறுநாளான 20ம் தேதி, வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்தும், கூட்ட நெரிசல் குறையும் வரை, கூடுதல் பேருந்துகள் இயக்க, கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.