/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்ணடி, விம்கோ நகர் மெட்ரோ ஸ்டேஷனில் கூடுதலாக வாகனங்கள் நிறுத்த வசதி
/
மண்ணடி, விம்கோ நகர் மெட்ரோ ஸ்டேஷனில் கூடுதலாக வாகனங்கள் நிறுத்த வசதி
மண்ணடி, விம்கோ நகர் மெட்ரோ ஸ்டேஷனில் கூடுதலாக வாகனங்கள் நிறுத்த வசதி
மண்ணடி, விம்கோ நகர் மெட்ரோ ஸ்டேஷனில் கூடுதலாக வாகனங்கள் நிறுத்த வசதி
ADDED : செப் 06, 2025 12:42 AM

சென்னை :மண்ணடி, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்களில், கூடுதல் வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சென்னையில், இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிப்போரின் வாகனங்களை நிறுத்த சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம் உட்பட 41 நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் சில இடங்களில், வாகனங்களை நிறுத்த முடியாமல் மெட்ரோ ரயில் பயணியர் அவதிப்படுகின்றனர்.
எனவே, கூடுதல் வாகன நிறுத்தங்களை கொண்டுவர, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில்களில் தினசரி பயணிப்போரின் எண்ணிக்கை, நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது. மற்றொருபுறம், வாகன நிறுத்துமிடங்களில் இடநெருக்கடியும் ஏற்படுவதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் கூடுதல் வாகன நிறுத்தங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, மண்ணடி மெட்ரோ நிலையத்தில் 350 கார்கள், 500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், விம்கோ நகரில் 100 கார்கள், 500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த வாகன நிறுத்தங்களின் கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுளோம். இந்த பணிகள் அனைத்தும், ஆறு மாதங்களில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.