/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி மாணவர்கள் 'ரூட்' தல விவகாரம் 5 ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு
/
கல்லுாரி மாணவர்கள் 'ரூட்' தல விவகாரம் 5 ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு
கல்லுாரி மாணவர்கள் 'ரூட்' தல விவகாரம் 5 ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு
கல்லுாரி மாணவர்கள் 'ரூட்' தல விவகாரம் 5 ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு
ADDED : ஜூன் 18, 2025 12:17 AM
சென்னை, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே மோதலை தடுக்க, சென்னை சென்ட்ரல் உட்பட ஐந்து ரயில் நிலையங்களில், கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில், காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர், மின்சார ரயில்களின் படியில் தொங்கியபடியும், ரயிலின் ஜன்னல் பகுதியில் நின்று கொண்டும், சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் ரயில் நிலையங்களிலும் கற்களால் வீசி, தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. தற்போது, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களிடையே மோதல் போக்கை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதான ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கல்லுாரி மாணவர்களிடையே மோதல் கூடாது என, பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மாணவர்கள் சிலர் அறிவுரையை ஏற்காமல், வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதனால், சென்ட்ரலில் வழக்கத்தை விட, கூடுதல் போலீசார் நியமனம் செய்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, பெரம்பூர், வியாசர்பாடி, பட்டரவாக்கம், இந்து கல்லுாரி ஆகிய ரயில் நிலையங்களிலும், தலா நான்கு போலீசார் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெறிமுறை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.