/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்
/
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ADDED : டிச 07, 2025 05:14 AM
திருவொற்றியூர்: ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் திறப்பு வைபவத்தில், மூன்று லட்சம் பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் ஆதிபுரீஸ்வரர் புற்று திருமேனியின் மீது, ஆண்டு முழுதும், தங்க முலாம் பூசிய நாக கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும்.
ஆண்டுக்கொரு முறை, கார்த்திகை தீபத்தையொட்டி மூன்று நாட்கள், ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடக்கும்.
அதன்படி, 4ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, நவ தீபங்கள் ஒளியில், ஆதிபுரீஸ்வரர் தங்க நாக கவசம் திறக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேக வைபவம் துவங்கியது.
கடைசி நாளான நேற்றிரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், ஆதிபுரீஸ்வரர் புற்று திருமேனி மீது, மீண்டும் தங்க முலாம் பூசிய நாக கவசம் அணிவிக்கப்பட்டது.
இனி, அடுத்தாண்டு, கார்த்திகை தீபத்திற்கு தான், ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும்.

