sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மேம்பால கம்பங்களில் விளம்பர தட்டிகளால் விபத்து அபாயம்

/

 மேம்பால கம்பங்களில் விளம்பர தட்டிகளால் விபத்து அபாயம்

 மேம்பால கம்பங்களில் விளம்பர தட்டிகளால் விபத்து அபாயம்

 மேம்பால கம்பங்களில் விளம்பர தட்டிகளால் விபத்து அபாயம்


ADDED : மார் 18, 2026 05:56 AM

Google News

ADDED : மார் 18, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: தாம்பரத்தில், மேம்பால மின் கம்பங்களில் வரிசையாக கட்டி தொங்கவிடப்பட்டுள்ள விளம்பர தட்டிகளால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, விபத்தில் சிக்கும் சூழல் அதிகரித்துள்ளது.

புறநகரில், பெருங்களத்துார், தாம்பரம், சானடோரியம், எம்.ஐ.டி., ரயில்வே கேட், பல்லாவரம் பான்ட்ஸ் சிக்னல், பல்லாவரம் - குன்றத்துார் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக மேம்பாலங்கள் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

இந்த மேம்பாலங்களின் மேற்பகுதியில் உள்ள மின் கம்பங்களில், அனுமதியின்றி விளம்பர தட்டிகளை கட்டி தொங்க விடுவது, தனியார் கேபிள்களை கட்டுவது போன்ற செயல்கள் அதிகமாக நடந்து வருகின்றன.

குறிப்பாக, தாம்பரம் மேம்பாலத்தில், அனைத்து மின் கம்பங்களிலும், வரிசையாக விளம்பர தட்டிகளை கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

தொங்கிக் கொண்டிருக்கும் அவை, அதிக காற்று அடிக்கும் போது அறுந்து, வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன.

மற்றொரு புறம், வரிசையாக தொங்கவிடப்பட்டுள்ள விளம்பர தட்டிகளால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது.

அதுமட்டுமின்றி, கம்பங்களில் இழுத்து கட்டப்பட்டுள்ள தனியார் கேபிள்களால், மின் கம்பங்கள் வலுவிழக்க வாய்ப்புள்ளது.

மேம்பால மின் கம்பங்களில், விளம்பர தட்டிகளை கட்டி தொங்கவிடவோ, தனியார் கேபிள்களை கட்டவோ கூடாது என, மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அப்படியிருந்தும், மாநகராட்சி அறிவிப்பை அலட்சியப்படுத்தி, தொடர்ச்சியாக விளம்பர தட்டிகளை கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

அதனால், மாநகராட்சி கமிஷனர், மேம்பாலத்தில் ஆய்வு செய்து, விதிமுறையை மீறி கம்பங்களில் விளம்பர தட்டிகளை கட்டி தொங்கவிட்டுள்ளோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us