sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரேஸ் கோர்ஸில் வெள்ள தேக்கம் தடுக்க ரூ.4.85 கோடியில் வடிகால்வாய் அமைப்பு

/

 ரேஸ் கோர்ஸில் வெள்ள தேக்கம் தடுக்க ரூ.4.85 கோடியில் வடிகால்வாய் அமைப்பு

 ரேஸ் கோர்ஸில் வெள்ள தேக்கம் தடுக்க ரூ.4.85 கோடியில் வடிகால்வாய் அமைப்பு

 ரேஸ் கோர்ஸில் வெள்ள தேக்கம் தடுக்க ரூ.4.85 கோடியில் வடிகால்வாய் அமைப்பு


ADDED : மார் 18, 2026 05:57 AM

Google News

ADDED : மார் 18, 2026 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி: கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் தேங்கும் மழைநீர், 24 கி.மீ., பயணிப்பதை தடுத்து, 2 கி.மீ., துாரத்தில் அடையாறு ஆற்றில் சேரும் வகையில், 4.85 கோடி ரூபாயில் வடிகால்வாய் கட்டப்ப டுகிறது.

அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகம், 116 ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்த ஆண்டு, இந்த இடத்தை தமிழக அரசு மீட்டது.

இந்த வளாகத்தில் தேங்கும் மழைநீர், சிட்டி லிங்க் சாலை வடிகால்வாயில் சென்று, வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பகிங்ஹாம் கால்வாய் வழியாக, 24 கி.மீ., பயணித்து, முட்டுக்காடு கடலில் சேர்கிறது. அதனால், கிண்டி, வேளச்சேரி பகுதி வெள்ள பாதிப்புக்கு, ரேஸ் கோர்ஸ் வளாக மழைநீரும் ஒரு காரணமாக இருந்தது.

இந்த வெள்ளத்தை, 2 கி.மீ., துாரத்தில் உள்ள அடையாறு ஆற்றுக்கு கொண்டு செல்லும் வகையில், மாநகராட்சி திட்டமிட்டது.

மேடான பகுதியானதால், அதற்கு ஏற்ப வடிகால்வாய் கட்டமைப்பு அமைக்க வேண்டும் என முடிவு செய்து, இரண்டு மாதம் கள ஆய்வு பணி நடந்தது.இதையடுத்து, 4.85 கோடி ரூபாயில், 650 மீட்டர் நீளம், 7 அடி அகலம் மற் றும் நீரோட்டத்தை கணக்கிட்டு, 7 முதல் 12 அடி வரை ஆழத்தில் வடிகால்வாய் கட்டி, சர்தார் படேல் சாலை வடிகால்வாயுடன் இணைக்கப்படுகிறது.

மூன்று மாதத்தில் கட்டுமான பணியை முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பணி முடிந்தால், வரும் பருவ மழைக்கு, ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் தேங்கும் மழைநீர், அடையாறு ஆற்றில் சேரும்.

வெள்ள பாதிப்பு தடுக்கப்படும் என, அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us