/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யு.பி.எஸ்.சி., தேர்வர்களுக்கு 'மனிதநேயம்' சார்பில் உணவு
/
யு.பி.எஸ்.சி., தேர்வர்களுக்கு 'மனிதநேயம்' சார்பில் உணவு
யு.பி.எஸ்.சி., தேர்வர்களுக்கு 'மனிதநேயம்' சார்பில் உணவு
யு.பி.எஸ்.சி., தேர்வர்களுக்கு 'மனிதநேயம்' சார்பில் உணவு
ADDED : ஆக 23, 2025 11:23 PM
சென்னை, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் 'மனிதநேயம்' கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகம் சார்பில், யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு, இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.
சென்னையில், சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு எழுதிய மாணவ - மாணவியருக்கு, 'மனிதநேயம்' கட்டணமில்லாத ஐ.ஏ.எஸ்., கல்வியகம் சார்பில், மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு, நாடு முழுதும் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த தேர்வு, இன்றும், வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் நடக்கின்றன. இத்தேர்வை, 711 மாணவ - மாணவியர் எழுதுகின்றனர்.
சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் உயர்நிலை பள்ளி, ஷெனாய் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஷெனாய் நகர் சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளி, பெரியமேடில் உள்ள வள்ளல் பி.டி.எல்.இ.இ., செங்கல்வராய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நேற்று முதன்மை தேர்வு நடந்தது. தேர்வெழுதிய மாணவ - மாணவியருக்கு, சைதை துரைசாமியின் 'மனிதநேயம்' கட்டணமில்லாத ஐ.ஏ.எஸ். கல்வியகம் சார்பில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.