/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி சென்னை வீராங்கனை 'சாம்பியன்'
/
தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி சென்னை வீராங்கனை 'சாம்பியன்'
தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி சென்னை வீராங்கனை 'சாம்பியன்'
தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி சென்னை வீராங்கனை 'சாம்பியன்'
ADDED : ஆக 23, 2025 11:24 PM

சென்னை, ஜூனியர் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சென்னை வீராங்கனை தியா ரமேஷ், 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
அகில இந்திய டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து சர்வதேச அளவில் ஐ.டி.எப்., ஜூனியர் டென்னிஸ் கோப்பை போட்டி, நுங்கம்பாக்கம், எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில் நடந்தது. இதில், இந்தியா மற்றும் வெளிநாடு வாழ் இந்திய வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
போட்டிகள் இரு பிரிவாக 'லீக் கம் நாக் அவுட்' முறையில் நடந்தன. இதன் அனைத்து சுற்றும் முடிந்து, நேற்று இறுதிப்போட்டி நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில், சென்னையின் தியா ரமேஷ், மஹாராஷ்டிராவின் பார்த்தசாரதி அருண் முந்தேவை எதிர்த்துப் போட்டியிட்டார். போட்டியின் முதல் செட்டில் அசத்திய தியா 6 - 4 என்ற புள்ளியில் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6 - 0 எனக் கைப்பற்றி, நேர் செட்டில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அடுத்து ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வம்சாவளியான யாஷ்வின் கிருஷ்ணகுமார், இந்தியாவின் விராஜ் கோஹிலை எதிர்த்து மோதினார். இதில் யாஷ்வின் கிருஷ்ணகுமார் 6- - 1 6 - -4 என்ற நேர்செட் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.