/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏரோபிரிட்ஜ்' பற்றாக்குறை: விமான பயணியர் அவதி
/
'ஏரோபிரிட்ஜ்' பற்றாக்குறை: விமான பயணியர் அவதி
ADDED : ஜன 01, 2026 04:34 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துாத்துக்குடி, சேலம், விஜயவாடா உள்ளிட்ட பல இடங்களுக்கு, சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகிறது.
இந்த விமானத்தில், அதிகபட்சமாக 72 பேர் வரை பயணிக்கலாம். விமானம் தரையிறங்கியதும் பயணியர் முனையத்திற்குள் செல்வதற்கு வசதியாக, 'ஏரோபிரிட்ஜ்' எனும் இணைப்பு பாலம் விமான நிலையங்களில் இருக்கும். பயணியர் பிரச்னை இல்லாமல் உள்ளே செல்வர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏ.டி.ஆர்., ரக விமானங்களுக்கு, ஏரோபிரிட்ஜ் வசதிகள் இல்லாத சூழல் இருந்து வருகிறது. இதனால் பயணியர் 'ரிமோட் பே' எனும் பஸ்சில் ஏற்றப்பட்டு முனையத்திற்குள் செல்கின்றனர்.
இதனால் முனையத்தில் இருந்து வெளியே வருவதற்கு, ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படுவதாக பயணியர் குறை கூறுகின்றனர். இதுமட்டுமின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து பேட்டரி வாகனத்தில் ஏறி, மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று வெளியேறுகின்றனர்.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நேரங்களில் பயணியர் சிரமமில்லாமல் செல்லும் வகையில் ஏரோபிரிட்ஜ் மற்றும் கேட் பகுதியில் ஆட்களை நியமித்து, சேவை வழங்க வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

