/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 ஆண்டுக்குப்பின் சென்னையில் பி.சி.சர்கார் குழு 'மேஜிக் ேஷா'
/
10 ஆண்டுக்குப்பின் சென்னையில் பி.சி.சர்கார் குழு 'மேஜிக் ேஷா'
10 ஆண்டுக்குப்பின் சென்னையில் பி.சி.சர்கார் குழு 'மேஜிக் ேஷா'
10 ஆண்டுக்குப்பின் சென்னையில் பி.சி.சர்கார் குழு 'மேஜிக் ேஷா'
ADDED : ஜூன் 16, 2025 02:28 AM
சென்னை,:பத்து ஆண்டுகளுக்குப்பின் சென்னையில், பி.சி.சர்கார் 'மேஜிக் ேஷா' துவங்கியுள்ளது.
இந்தியாவின் புரோதுல் சந்திர சர்கார், கண்கட்டி வித்தை எனும் மேஜிக் கலையில் உலக அளவில் புகழ் பெற்றவர்.
ஆகாயத்தில் மனிதர் பறப்பது, மனித உடலை துண்டுகளாக்கி மீண்டும் இணைப்பது போன்ற கண்கட்டி வித்தையை, உலகில் முதன் முதலாக நடத்திக் காட்டியவர்.
இவரது மறைவிற்கு பின், அவரது வாரிசுகள் மேலும் பல புதுமைகளை புகுத்தி, பி.சி.சர்கார் எனும் பெயரில், 'மேஜிக் ேஷா'க்களை உலக அளவில் நடத்தி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டிற்கு பின், சென்னையில் மீண்டும் பி.சி.சர்கார் மேஜிக் ேஷா மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள மியூசியம் திரையரங்கில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை 5:00 மணி, 7:00 மணி என, இரண்டு காட்சிகள் இந்த மேஜிக் ேஷா' நடக்கிறது.
கூடுதல் விபரங்களுக்கு, 98406 71677 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.