/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அதிநவீன கட்டமைப்பு அறிமுகம்
/
அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அதிநவீன கட்டமைப்பு அறிமுகம்
அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அதிநவீன கட்டமைப்பு அறிமுகம்
அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அதிநவீன கட்டமைப்பு அறிமுகம்
ADDED : செப் 19, 2024 12:35 AM

சென்னை, கண் ஒளி விலகல், கிட்டப்பார்வை, துாரப்பார்வை, மாறுப்பட்ட பார்வை பாதிப்புகளுக்கு அதிநவீன சிகிச்சை கட்டமைப்பை, தாம்பரம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.
கண் சிகிச்சைக்கான, 'அல்கான் வேவ்லைட் எக்ஸ் 500 மற்றும் அலீக்ரோ டோப்போலைஸர் - வேரியா' ஆகிய இரு வேறு அதிநவீன மருத்துவ கருவிகள், தாம்பரம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான துவக்க நிகழ்ச்சியில், தாம்பரம் மேயர் வசந்த குமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் பிராந்திய தலைவர் ஸ்ரீனிவாச ராவ் கூறியதாவது:
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த கண் பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறோம். தாம்பரத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில், கண் புரைக்கான சிகிச்சை, விழித்திரைக்கான மருத்துவ சிகிச்சை, ஒளிவிலகல் பாதிப்புக்கான அறுவை சிகிச்சை, விழி ஒட்டுறுவை சிகிச்சை, கண் அழுத்த நோய்க்கான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.