தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டாக்டர் அகர்வால்ஸ் சாஸ்த்ரா பல்கலை இடையே ஒப்பந்தம்

டாக்டர் அகர்வால்ஸ் சாஸ்த்ரா பல்கலை இடையே ஒப்பந்தம்

டாக்டர் அகர்வால்ஸ் சாஸ்த்ரா பல்கலை இடையே ஒப்பந்தம்


UPDATED : ஜூலை 16, 2026 04:13 PM

ADDED : ஜூலை 16, 2026 03:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 04:13 PM ADDED : ஜூலை 16, 2026 03:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனம், சாஸ்த்ரா பல்கலையுடன் இணைந்து, 'ஆப்டோமெட்ரி' படிப்புகளை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், டாக்டர் அகர்வால்ஸ் ஆப்டோமெட்ரிக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் கற்பகம், சாஸ்த்ரா பல்கலை துணைவேந்தர் வைத்ய சுப்பிரமணியம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து, டாக்டர் அகர்வால்ஸ் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த கல்வியாண்டு முதல் பல்கலையில், ஆப்டோமெட்ரிக் படிப்புகள் தொடங்கப்படும்.

அதில், இளநிலை படிப்புக்கு, 60 மாணவர்கள், முதுநிலை படிப்புக்கு, 10 மாணவர்கள், பி.ஹெச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கு, 5 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கான வகுப்புகள் ஆக., 15 முதல் தொடங்கப்படும். அத்துடன், மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கு சிறந்த மருத்துவ கள அனுபவத்தையும், பல்வேறு பிரிவுகளில் கல்வியையும் வழங்கும் வகையில், அதற்கான திட்டமும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us