/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூமி பூஜையில் அல்வா தந்த அ.தி.மு.க., கவுன்சிலர்
/
பூமி பூஜையில் அல்வா தந்த அ.தி.மு.க., கவுன்சிலர்
ADDED : ஜன 28, 2025 12:54 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம், ஏழாவது வார்டு, கார்கில் நகரில், சென்னை மாநகராட்சி பள்ளி செயல்படுகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளிக்கு தேவையான சத்துணவு சமைக்கும் வகையில், புதிய கட்டடம் கட்ட, 10 லட்ச ரூபாய் செலவிலான பணிகளுக்கு, பூமி பூஜை போடும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது.
இதில், ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் பங்கேற்று, கட்டடப் பணிகளுக்கு பூமி பூஜை போட்டார். அதை தொடர்ந்து, இனிப்பாக அனைவருக்கும் அல்வா வழங்கப்பட்டது.
இது குறித்து, அவர் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாக, மக்களுக்கு அல்வா கொடுத்து வருகிறது. அதை பிரதிபலிக்கும் வகையிலேயே, அல்வா வினியோகம் செய்யப்பட்டது. இனி, வார்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், இனிப்பாக அல்வா தான் வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

