/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஆசிட்' வீசுவதாக மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
/
'ஆசிட்' வீசுவதாக மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
'ஆசிட்' வீசுவதாக மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
'ஆசிட்' வீசுவதாக மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : நவ 30, 2024 12:33 AM

அமைந்தகரை, அமைந்தகரை, திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 22 வயது இளம் பெண், சி.ஏ., படிக்கிறார். இவர், அமைந்தகரை போலீசில் அளித்த புகார்:
உறவினர் திருமண நிகழ்ச்சியில் அறிமுகமான, தி.நகர், கண்ணாம்மாபேட்டையை சேர்ந்த திருமுருகன், 37, குடும்ப நண்பராக பழகினார்.
இவர், அ.தி.மு.க., அம்மா பேரவையில், தென்சென்னை மாவட்ட துணை செயலராக உள்ளார். திருமணம் செய்து கொள்ளும்படி, ஐந்து ஆண்டுகளாக வற்புறுத்துகிறார்.
இதனால், கோடம்பாக்கத்தில் சொந்த வீட்டை காலி செய்துவிட்டு, அமைந்தகரையில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். வாடகை வீட்டை கண்டுபிடித்து, தினமும் வீட்டின் வாசலுக்கு வந்து, அவதுாறாக பேசி, வகுப்புக்கு செல்ல விடாமல் தகராறு செய்கிறார்.
திருமணம் செய்ய மறுத்தால் முகத்தில், ஆசிட் வீசுவதாக மிரட்டுகிறார். கடந்த 27ம் தேதி வீட்டு வாசலில் தகராறு செய்து, என்னையும், தாயாரையும் தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார்.
புகாரையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் இரவு திருமுருகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.