/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொலை, கொள்ளை, போதை தான் தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றச்சாட்டு
/
கொலை, கொள்ளை, போதை தான் தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றச்சாட்டு
கொலை, கொள்ளை, போதை தான் தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றச்சாட்டு
கொலை, கொள்ளை, போதை தான் தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : மே 09, 2025 01:17 AM
சென்னை:'கொலை, கொள்ளை, போதை, பாலியல் வன்கொடுமைகள் தான், தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த நான்காண்டு தி.மு.க., ஆட்சியை, அக்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லை. இதனால், திட்டங்களை செயல்படுத்துவதும், உள்கட்டமைப்பு மேம்பாடும் தாமதமாகின்றன.
தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மாநில அரசின் கடன் சுமை அதிகரித்து, கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.
மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் தாமதம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு ஆகியவை, மாநில வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளன.
மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்றவை, நிதி நெருக்கடியால் தடைபட்டன. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்று, வாய்ஜாலம் பேசிய முதல்வர் ஸ்டாலின், 50 சதவீதம் பேருக்கு கூட கொடுக்கவில்லை.
தொடர் கொலைகள், ஜாதிய மோதல்கள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிக்கும் முதியோர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல், கொலை செய்யப்படுதல் போன்ற சட்டவிரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குற்றங்களைத் தடுப்பதில், எந்தவித முன்னேற்றமும் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக, தமிழகத்தை மாற்றியது தான் தி.மு.க., அரசின் சாதனை.
கடந்த நான்கு ஆண்டுகளாக, போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப் பொருள் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பின், இரண்டு முறை கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது தான், தி.மு.க., அரசின் சாதனை.
இந்த அரசின் மீது அமைச்சர் ஒருவர் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.
அரசின் தவறுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியும், அதை திருத்திக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இல்லை.
அத்திக்கடவு- - அவினாசி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், 50 ஆண்டு காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, குடிமராமத்து திட்டம் என, அ.தி.மு.க., சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தி.மு.க.,வினரால் இதுபோல் ஒரு சாதனையை குறிப்பிட்டுக் கூற முடியுமா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.