ADDED : ஜூலை 09, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, 'சென்னை மாநகராட்சியை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 14ம் தேதி மனித சங்கிலி நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:
வடசென்னையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ், 2,000 தற்காலிக துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், தி.மு.க., அரசு தனியார் நிறுவனத்திற்கு துாய்மை பணியை வழங்கி உள்ளது.
இதை கண்டித்து, அ.தி.மு.க., வட சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில், வரும் 14ம் தேதி மாலை 4:00 மணிக்கு, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் முதல் டோல்கேட் வரை, மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இளைஞர் பாசறை செயலர் பரமசிவம் தலைமை வகிப்பார்; மாவட்ட செயலர் ராஜேஷ் முன்னிலை வகிப்பர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

