/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., பெரம்பூர் தொகுதி பூத் கமிட்டி களஆய்வு கூட்டம்
/
அ.தி.மு.க., பெரம்பூர் தொகுதி பூத் கமிட்டி களஆய்வு கூட்டம்
அ.தி.மு.க., பெரம்பூர் தொகுதி பூத் கமிட்டி களஆய்வு கூட்டம்
அ.தி.மு.க., பெரம்பூர் தொகுதி பூத் கமிட்டி களஆய்வு கூட்டம்
ADDED : ஏப் 07, 2025 03:02 AM

வியாசர்பாடி:வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில், பெரம்பூர் தொகுதி, 37வது வட்ட பூத் கமிட்டி களஆய்வு கூட்டம், வியாசர்பாடி, முல்லை நகரில் நடந்தது.
இந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் கழக மருத்துவரணி மாநில துணை செயலரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் மணிகண்டன், அம்மா பேரவை துணைச்செயலர் சி.பி.மூவேந்தனர் ஆகியோர் பங்கேற்று, ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி புத்தகத்தில், பாக பொறுப்பாளர்கள் 55 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனரா என, ஆய்வு செய்து, அடையாள அட்டைகளை சரிபார்த்தனர்.
அப்போது, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மணிகண்டன் கூறுகையில், ''அ.தி.மு.க., பூத் கமிட்டியில், பூத் ஒன்றிற்கு ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது. பூத் கமிட்டியிலும் கட்சியிலும் இளைஞர்களை அதிகம் சேர்க்க வேண்டும்; பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான், அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைப்பர். பெரம்பூர் சட்டசபை தொகுதியை, 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார்.

