/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
28ல் ஸ்ரீபெரும்புதுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
28ல் ஸ்ரீபெரும்புதுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 24, 2025 12:17 AM
சென்னை, 'தி.மு.க., அரசையும், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியையும் கண்டித்து, வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில், பாதாள சாக்கடை அமைக்க அ.தி.மு.க., ஆட்சியில், 102.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. ஆட்சி மாறியபின், இந்தப் பணிகள் முடிக்கப்படவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில், 59.66 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டிகளை, இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி பகுதிகளில் முறையாக மின்சாரம் வழங்கப்படுவதில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட ராமானுஜர் மணி மண்டபம், இப்போது பாழடைந்துள்ளது.
இதற்கு காரணமான தி.மு.க., அரசையும், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, வரும் 28ம் தேதி,  காலை 10:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்தரம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.
***

