/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து வரும் 25ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 19, 2025 12:26 AM
சென்னை, 'திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து, வரும் 25ம் தேதி, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில், குப்பை சரியாக அள்ளப்படுவதில்லை. கொசு மருந்து அடிப்பதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. தடையின்றி குடிநீர் வழங்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகத்தை அணுகினால் உரிய பதில் இல்லை.
இதற்கு காரணமான திருநின்றவூர் நகராட்சியையும், தி.மு.க., அரசையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு, திருநின்றவூர் காந்தி சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், அப்துல் ரஹீம், அமைப்புச் செயலர் திருவேற்காடு சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்பர்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.