/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரையிறங்க முடியாமல் தவித்த ஏர் இந்தியா விமானம்
/
தரையிறங்க முடியாமல் தவித்த ஏர் இந்தியா விமானம்
ADDED : ஏப் 03, 2025 12:29 AM
சென்னை, ஏர் இந்தியா விமானம், மும்பையில் இருந்து காலை 9:00 மணிக்கு சென்னை வந்து, பின் காலை 11:45 மணிக்கு, மதுரைக்கு புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில், நேற்று 164 பயணியருடன் சென்னை வந்த அந்த விமானம், விமான நிலைய பிரதான ரன்வேயில் தரையிறங்க முயன்ற போது, ஓடுபாதையில் சரியாக பொருந்தவில்லை.
இதனால், மீண்டும் மேல் நோக்கி விமானம் பறந்தது. 10 நிமிடங்களுக்கு பின், மீண்டும் அதே ரன்வேயில் தரையிறங்க முற்பட்டபோது, ஓடு பாதையில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.
அதனால், மீண்டும் வானில் பறந்து வட்டமடித்து கொண்டிருந்தது. பின், காலை 11:30 மணிக்கு, பத்திரமாக தரையிறங்கியது.
விமானியின் கவனக் குறைவா அல்லது ரன்வேயில் ஏதேனும் பிரச்னையா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

