/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கப்பூர், டில்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்
/
சிங்கப்பூர், டில்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்
சிங்கப்பூர், டில்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்
சிங்கப்பூர், டில்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்
ADDED : ஏப் 23, 2025 12:43 AM
சென்னை, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12:30 மணிக்கு சிங்கப்பூர் புறப்படும் ஏர் இந்தியா விமானம், மூன்று மணி நேரம் தாமதமாக, நேற்று அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
அதேபோல், டில்லிக்கு காலை 8:00 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம், மூன்று மணி நேரம் தாமதமாக, காலை 11:00 மணிக்கு புறப்பட்டு சென்றது.
மும்பைக்கு காலை 11:30 மணிக்கு புறப்படும் விமானம், இரண்டு மணி நேரம் தாமதமாக, பகல் 1:30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்து சொதப்பியதால், சென்னையில் இருந்து சிங்கப்பூர், டில்லி, மும்பைக்கு செல்லும் பயணியர் செய்வதறியாமல் தவித்தனர்.
விமான நிறுவனம் முன்கூட்டியே எந்த தகவலும் அளிக்காமல், பயணியரை அழைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாமதத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகளும் எடுக்கவில்லை. இது, விமான பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
***