/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.ஜி.பி., அலுவலகம் முன் ரகளை ஏர்போர்ட் மூர்த்தி கைது
/
டி.ஜி.பி., அலுவலகம் முன் ரகளை ஏர்போர்ட் மூர்த்தி கைது
டி.ஜி.பி., அலுவலகம் முன் ரகளை ஏர்போர்ட் மூர்த்தி கைது
டி.ஜி.பி., அலுவலகம் முன் ரகளை ஏர்போர்ட் மூர்த்தி கைது
ADDED : செப் 08, 2025 06:17 AM
சென்னை: டி.ஜி.பி., அலுவலகம் அருகே, போலீசார் முன்னிலையில் கத்தியால் கிழிப்பு, செருப்பு அடி, ஓட ஓட விரட்டுதல் உள்ளிட்ட களேபரம் நடந்தது தொடர்பாக, புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி தலைவரும், பா.ம.க., மாவட்ட செயலருமான ஸ்டாலின் மீது, பெட்ரோல் குண்டு வீசி, மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்றனர்.
இதனால், ஸ்டாலினுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், சென்னை மயிலாப்பூரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கச் சென்றார்.
அவருடன் செல்ல முயன்ற புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி மீது, போலீசார் முன்னிலையில், வி.சி., கட்சியினர், செருப்பு மற்றும் கைகளால் தாக்கினர். பதிலுக்கு மூர்த்தியும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, வி.சி., கட்சியினரை ஓட ஓட விரட்டினார்.
வி.சி., தலைவர் திருமாவளவன் குறித்து, மூர்த்தி கடுமையாக விமர்சனம் செய்து வருவதால், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, மூர்த்தியும், வி.சி., கட்சியினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை மெரினா போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். வி.சி., கட்சியினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
'நில அபகரிப்பு புகாரால் தாக்குதல்'
வி.சி., கட்சி நிர்வாகி சாரநாத் நேற்று அளித்த பேட்டி:
வெளிநாட்டில் வசித்து வரும், கணவனை இழந்த பெண்ணுக்கு, சென்னை ராயப்பேட்டையில் இடம் உள்ளது. இதை அபகரிக்க மூர்த்தி முயற்சி செய்து வருகிறார். இதனால், அவர் பெயரை குறிப்பிடாமல் இடத்தை அபகரிக்க முயலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.
இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, டி.ஜி.பி., அலுவலகம் அருகே, டீ கடையில் நின்று கொண்டிருந்த வி.சி., கட்சியினரிடம், 'என் விஷயத்தில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்' என கேட்டு, தகராறு செய்தார். அவர் திட்டமிட்டு, அடியாட்களையும் அழைத்து வந்திருந்தார்.
ஏர்போர்ட் மூர்த்தி, திருமாவளவன் பற்றி பேசி, மீடியா வெளிச்சம் தேட முயல்கிறார். மூர்த்தி தான் எங்கள் கட்சியினரை கத்தியால் கிழித்து தாக்கினார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து, கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.