/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் கூடுதல் பாதுகாப்பு பார்வையாளர்கள் சிறப்பு 'பாஸ்' ரத்து

ADDED : ஆக 12, 2025 12:37 AM
சென்னை, சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, வரும் 20ம் தேதி வரை, பார்வையாளருக்கான சிறப்பு பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டின் 79வது சுதந்திர தினம், வரும் 15ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது.
பொதுவாக, இம்மாதிரியான வேளைகளில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், நேற்று துவங்கி வரும் 20ம் தேதி வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, விமான நிலையத்தில் இருந்த மூன்று அடுக்கு பாதுகாப்பு, கூடுதலாக ஐந்தடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் மற்றும் பயணியர் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து, பயணியருடன் வரும் பார்வையாளருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாஸ், தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பதன் காரணமாக, பயணியர் முன்கூட்டியே விமான நிலையம் வந்து, சோதனைகளை முடிக்கும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.