/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய டென்னிஸ் சென்னை பல்கலை அசத்தல்
/
அகில இந்திய டென்னிஸ் சென்னை பல்கலை அசத்தல்
ADDED : டிச 18, 2024 11:58 PM

சென்னை,
பல்கலைகளுக்கு இடையிலான அகில இந்திய பல்கலை டென்னிஸ் போட்டியில், சென்னை பல்கலை அணி இரண்டாமிடம் பிடித்து அசத்தியது.
இந்திய பல்கலைகளின் சங்கங்கள் மற்றும் மணிப்பால் அகாடமி சார்பில், அகில இந்திய பல்கலை டென்னிஸ் போட்டி, கர்நாடகா மாநிலம் மணிப்பால் நகரில் நடந்தது.
போட்டியில், சென்னை பல்கலை, எஸ்.ஆர்.எம்., பல்கலை உட்பட நாடு முழுதும் இருந்து, 16 பல்கலை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அனைத்து போட்டிகள் முடிவில், உஸ்மானியா பல்கலை முதலிடத்தையும், சென்னை பல்கலை அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து அசத்தின. ரோஹ்தக் எம்.டி.யு., பல்கலை மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள் முறையே மூன்று, நான்காம் இடங்களை தட்டிச் சென்றன. போட்டியில், 'ரன்னர் அப்' பட்டம் வென்ற சென்னை பல்கலை அணியில், எம்.ஓ.பி.,வைஷ்ணவா கல்லுாரியின் நான்கு மாணவியர் இடம் பெற்றிருந்தனர்.