/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்பு மத்தியில் தனியார் ஆலை விதிமீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு
/
குடியிருப்பு மத்தியில் தனியார் ஆலை விதிமீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு
குடியிருப்பு மத்தியில் தனியார் ஆலை விதிமீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு
குடியிருப்பு மத்தியில் தனியார் ஆலை விதிமீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு
ADDED : மே 19, 2025 01:57 AM

கந்தன்சாவடி:பெருங்குடி மண்டலம், வார்டு 182க்கு உட்பட்டது கந்தன்சாவடி. இங்கு, சந்தோஷ் நகர் பிரதான சாலையும், சாந்தி நகர் சாலையும் இணையும் பகுதியில், ரப்பர் பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்படுகிறது.
இது, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுவதாக, பகுதி குடியிருப்பு நல சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
குறிப்பிட்ட நிறுவனம், மூலப்பொருட்களை கொதிக்க வைக்க, கொதிகலனை எரிவாயு வாயிலாக செயல்படுத்தாமல், மரக்கட்டைகளை வைத்து எரிக்கின்றனர்.
இதனால் எழும் புகையுடன் கரித்துகள்கள் கலந்து, வீடுகள் முழுதும் பரவுவதால், சுவாச கோளாறு ஏற்படுவதோடு, உணவு பொருட்களின் மீதும் படர்ந்து, அவை வீணாகின்றன.
தவிர, 'செட்பேக் ஏரியா' விடாமல் கட்டடம் கட்டப்பட்டுள்ளதோடு, 30 அடி சாலையின் ஓரத்தில், அனுமதியின்றி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஆலைக்கு வரும் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் ஓரத்திலேயே நிறுத்துகின்றனர். மேலும், இதில் பணிபுரியும் 150 ஊழியர்களுக்கும், முகக்கவசம், கையுறை போன்ற அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படுவதில்லை. ஏதேனும், அசம்பாவிதம் நடந்தால் வெளியேற, அவசரகால வழியும் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன், கொதிகலன் வெடித்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர். இச்செய்தியே வெளி வராமல் தடுத்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்நிறுவனத்தின் மீது முறையாக ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.