சுப்பிரமணியத்துக்கு ஓட்டு கூட்டணி கட்சிகள் சேகரிப்பு
சுப்பிரமணியத்துக்கு ஓட்டு கூட்டணி கட்சிகள் சேகரிப்பு
ADDED : ஏப் 19, 2026 07:47 PM

சென்னை: சைதாப்பேட்டை தி.மு.க., வேட்பாளர் சுப்பிரமணியனுக்கு ஆதரவாக, கூட்டணி கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர், ஓட்டு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டனர்.
சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சுப்பிரமணியன், சைதை மேற்கு பகுதியில், தி.மு.க., அரசின் சாதனைகளை கூறி, வாகன பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார்.
திடீர் நகர், வி.எஸ்.எம்.கார்டன், எத்திராஜ் நகர், பிள்ளையார்கோவில் தெரு, ரெட்டிக்குப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகளில், சைதாப்பேட்டை தொகுதியில் செய்த பணிகள், தி.மு.க., அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, ஓட்டு சேகரித்தார்.
அப்போது, காங்., - வி.சி., - தே.மு.தி.க., - கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், 100க்கும் மேற்பட்டோர், ஓட்டு சேகரிப்பில் அவருடன் ஈடுபட்டனர். வீதி, வீதியாக பேரணி சென்ற அவர்கள், தி.மு.க., வேட்பாளர் சுப்பிரமணியன் படம் பொதித்த முககவசம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிரசாரம் செய்த தெருக்களில், பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், சுப்பிரமணியனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
