/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு மருத்துவ பிரிவுக்கு ரூ.7.77 கோடி ஒதுக்கீட்டு அனுமதி
/
விளையாட்டு மருத்துவ பிரிவுக்கு ரூ.7.77 கோடி ஒதுக்கீட்டு அனுமதி
விளையாட்டு மருத்துவ பிரிவுக்கு ரூ.7.77 கோடி ஒதுக்கீட்டு அனுமதி
விளையாட்டு மருத்துவ பிரிவுக்கு ரூ.7.77 கோடி ஒதுக்கீட்டு அனுமதி
ADDED : ஆக 09, 2025 12:15 AM
சென்னை,
ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி துறையை, 7.77 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் பிறப்பித்துள்ள அரசாணை:
'அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி துறை மேம்படுத்தப்படும்' என, சட்டசபையில் அறிவிப்பு வெளியானது.
அதன்படி, மருத்துவக் கல்வி இயக்ககம், சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது. அந்த துறையின் பேராசிரியர் பணியிடத்துக்கு, எலும்பியல் துறையில் இணை பேராசிரியராக உள்ள தகுதியான ஒருவருக்கு பதவி உயர்வு அளித்து நியமனம் செய்ய வேண்டும்.
அத்துடன், சென்னை மருத்துவக் கல்லுாரியின் இணை பேராசிரியர் ஒருவரை மாற்று பணியிட அடிப்படையில் ஓமந்துாரார் மருத்துவமனையில் நியமிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., நிறைவு செய்த டாக்டர் உட்பட ஆறு பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
இதற்கான நிர்வாக செலவினமாக ஆண்டுக்கு, 25.13 லட்சம் ரூபாய், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் உபகரணங்களை கொள்முதல் செய்ய, 7.77 கோடி ரூபாயும் வழங்கப்பட வேண்டும் ஆகிய பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்து, அதற்கான ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.