/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 பள்ளியில் கூடுதல் வகுப்பறை ரூ.1.79 கோடி ஒதுக்கீடு
/
3 பள்ளியில் கூடுதல் வகுப்பறை ரூ.1.79 கோடி ஒதுக்கீடு
3 பள்ளியில் கூடுதல் வகுப்பறை ரூ.1.79 கோடி ஒதுக்கீடு
3 பள்ளியில் கூடுதல் வகுப்பறை ரூ.1.79 கோடி ஒதுக்கீடு
ADDED : பிப் 16, 2024 12:28 AM
வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள மூன்று பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 1.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் 7 மேல்நிலைப் பள்ளிகள், 6 நடுநிலை மற்றும் 8 துவக்கப் பள்ளிகள் என, மொத்தம் 21 அரசு பள்ளிகளும், 6 அரசு உதவிபெறும் பள்ளிகளும் உள்ளன.
இந்நிலையில், 10 ஆண்டுகளாக மண்டலத்தில் உள்ள பள்ளிகளும், மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாமல் இருந்தன.
இதனால், பல பள்ளிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை நீடித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள 11 பள்ளிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
இதையடுத்து, இப்பள்ளிகளில் மாநகராட்சி சார்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், 143வது வார்டு நொளம்பூர் பாடசாலை தெருவிலுள்ள பள்ளியில், 84.04 லட்சம் ரூபாய் மதிப்பில் கீழ்தளம் மற்றும் மேல் தளம் என, நான்கு புது வகுப்பறைகள், 145வது வார்டு பல்லவன் நகரிலுள்ள பள்ளியில், 31.20 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள்.
மேலும், 148வது வார்டு மேட்டுக்குப்பம் பள்ளி தெருவிலுள்ள பள்ளியில், 63.76 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் கட்ட, மொத்தம் 1.79 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.