/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கு கணினி வழங்கிய முன்னாள் மாணவர்கள்
/
பள்ளிக்கு கணினி வழங்கிய முன்னாள் மாணவர்கள்
ADDED : பிப் 23, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, ஆவடி, மிட்ணமல்லி அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், 8 லட்சத்து 50,000 ரூபாய் மதிப்பில் கணினியை அப்பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி, தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது.
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டில்லி பங்கேற்று, புதிதாக அமைக்கப்பட்ட கணினி அறையை திறந்து வைத்தார்.
இதில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் என திரளானோர் பங்கேற்றனர்.