/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிந்தன் சாலையில் திடீர் நெரிசல் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் வாகனங்கள்
/
கோவிந்தன் சாலையில் திடீர் நெரிசல் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் வாகனங்கள்
கோவிந்தன் சாலையில் திடீர் நெரிசல் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் வாகனங்கள்
கோவிந்தன் சாலையில் திடீர் நெரிசல் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் வாகனங்கள்
ADDED : ஜூன் 27, 2025 12:49 AM

மேற்கு மாம்பலம் மேற்கு மாம்பலம், கோவிந்தன் சாலையில் நடந்து வரும் குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி பணியால், நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் சிக்கித் தவித்தன.
கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டு மேற்கு மாம்பலத்தில், கோவிந்தன் சாலை உள்ளது. இது, அசோக் நகர், கே.கே., நகர் மற்றும் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது. இச்சாலையில், மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்வாய் பணி நடந்து வருகிறது.
அதேபோல், குடிநீர் வாரியம் சார்பில், மேற்கு மாம்பலம் தம்பையா சாலையில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை கழிவுநீர் உந்து நிலையத்திற்கு இணைப்பு வழங்க, பள்ளம் தோண்டி குழாய் பதிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த இரு பணிகளால், நேற்று காலை கடும் நெரிசல் ஏற்பட்டு, கோவிந்தன் சாலை முதல் அசோக் நகர் 11வது அவென்யூ வரை, வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.
இதில், நோயாளிகளுடன் அவசரமாக வந்த இரு ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி தவித்தன.
அவசரத்திற்காக, எதிர் திசையில் அந்த வாகனங்கள் சென்றன. அவ்வாகனங்களை பின்தொடர்ந்து சென்ற மற்ற வாகனங்களால், நெரிசல் மேலும் அதிகரித்தது.
போலீசார் இல்லாததால், அப்பகுதி இளைஞர்கள் சிலர், போக்குவரத்தை சீரமைத்து, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர்.