/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடிக்கையாளர் தரவுகள் திருடிய அமெரிக்க டாக்டர் ஆவடியில் கைது
/
வாடிக்கையாளர் தரவுகள் திருடிய அமெரிக்க டாக்டர் ஆவடியில் கைது
வாடிக்கையாளர் தரவுகள் திருடிய அமெரிக்க டாக்டர் ஆவடியில் கைது
வாடிக்கையாளர் தரவுகள் திருடிய அமெரிக்க டாக்டர் ஆவடியில் கைது
ADDED : ஏப் 07, 2025 03:00 AM

ஆவடி:ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சாந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஜெய் பாலாஜி, 45. இவர், அதே பகுதியில், 'மெட் புரோ' என்ற பெயரில் தனியார் மருத்துவ காப்பீடு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில், காஷ்மீரைச் சேர்ந்த உமர் சபீர், 35, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கார்த்திக், 37, அயப்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 37, மற்றும் பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 33, ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் நான்கு பேரும், ஜெய் பாலாஜி நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர் தரவுகளை, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸாப் வாயிலாக திருடியுள்ளனர்.
பின், பணியில் இருந்து விலகி, ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் 'எம்.கேர்., புரோ' என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கி, நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து ஜெய்பாலாஜி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில், பணியில் இருந்து விலகி சென்ற ஊழியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, சில தகவல் இருந்தது. இது குறித்து விசாரித்த போது, நிறுவனத்தில் இருந்து தரவுகள் திருடப்பட்டது ஜெய்பாலாஜிக்கு தெரியவந்தது.
இந்த தரவு திருட்டால், தனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டு, சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில், ஜெய்பாலாஜி, கடந்த ஆண்டு புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார், ஏற்கனவே கிளன், கார்த்திக், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதில், முக்கிய குற்றவாளியான, குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் பூபந்த் அரிபாய் தேசாய், 79, என்பவருக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி, தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
அமெரிக்காவில் பணிபுரியும் இவர், நேற்று முன்தினம் ஆமதாபாத் விமான நிலையம் வந்தபோது, ஆவடி தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

