தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 14, 2026 09:08 PM

ADDED : அக் 14, 2026 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:08 PM ADDED : அக் 14, 2026 08:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமுல்லைவாயில்: திருமுல்லைவாயில் அம்மா உணவகத்தில் 12 ஆண்டுகளாக பணியாற்றிய எட்டு பெண்களை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து, நேற்று 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோழம்பேடு சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் காஸ், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் பயன்பாட்டில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 4ம் தேதி ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் எட்டு பெண்களையும் திடீரென பணிநீக்கம் செய்தனர். அவர்களுக்குப் பதிலாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பணி நீக்கத்தை கண்டித்தும், மீண்டும் வேலை வழங்கக் கோரியும், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலர் மயில்வாகனன் தலைமையில், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us